பல பெண்களை ஏமாற்றி பணம் பறித்த நாகர்கோவில் காசி வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றம்..

சென்னை மருத்துவர் உட்பட பல பெண்களை ஏமாற்றி பணம் பறித்த காசி வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டுள்ளது.

மாவட்ட காவல்துறை பேரில் சிபிசிஐடி இந்த வழக்கை விசாரிக்க தொடங்கியுள்ளனர்.

பேஸ்புக்,  இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் இளம்பெண்களிடம் பழகி, உல்லாசமாக இருந்து அதை வீடியோ எடுத்ததுடன், அதை காட்டி மிரட்டி லட்சக்கணக்கில் பணம் பறித்த வழக்கில் நாகர்கோவில் கணேசபுரத்தை சேர்ந்த தங்கபாண்டியன் மகன் காசியை (26) போலீசார் கைது செய்தனர். பள்ளி மாணவிகள் உள்பட பலரை சீரழித்த காசியை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.

பெண்களை ஏமாற்றி பாலியல் மோசடி செய்ததாக நான்கு வழக்குகள், போஸ்கோ வழக்கு, கந்துவட்டி வழக்கு என, மொத்தம் ஆறு வழக்குகள் காசி மீது பதிவுசெய்யப்பட்டுள்ளன. இதையடுத்து அவனை காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்தனர். இதையடுத்து முதற்கட்டமாக நாகர்கோவில் கூடுதல் மகளிர் விரைவு குற்றவியல் நீதிமன்றத்தில் 3 நாட்கள் காசியிடம் விசாரணை நடத்தினர்.

இந்த 3 நாள் விசாரணையிலும் காசி வாயே திறக்கவில்லை என்று கூறப்பட்டது. இதையடுத்து 2 ம் கட்டமாக 6 நாட்கள் காசியை காவலில் எடுத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கில், அரசியல் பிரமுகர்கள், பல்வேறு துறைகளைச் சார்ந்த வி.ஐ.பி-கள். பின்னணியில் இருப்பதால், காசி வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.

Leave a Response