நானாக யாரையும் ஏமாற்றவில்லை நாகர்கோவில் காசி வாக்குமூலம்..!

பாலியல் குற்றச்சாட்டில் சிக்கி போலிஸ் விசாரணையில் இருக்கும் குற்றவாளி காசியிடம் இருந்து போலிஸார் தகவல்களை வாங்க ஆரம்பித்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் கணேசபுரத்தைச் சேர்ந்தவர் காசி . சில ஆண்டுகளாக ஃபேஸ்புக் , இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்கள் வழியாக பல இளம்பெண்களிடம் நெருங்கிப் பழகி அதை வீடியோவாக எடுத்து மிரட்டி பணம் பறித்ததாக அவர் மீது புகார் எழுந்ததை அடுத்து தற்போது, குண்டர் சட்டம், போக்ஸோ சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டு போலிஸ் விசாரணையில் இருக்கிறார்.

இந்த விசாரணையில் காசி ‘ நான் பல பெண்களிடம் பழகி உள்ளேன். ஆனால் யாரையும் திருமணம் செய்துகொள்வதாக சொன்னதில்லை. என் அழகைப் பார்த்து வந்தவர்களிடம் உல்லாசமாக இருந்திருக்கிறேன். மேலும் என்னுடைய பணத்தேவைக்காக சில பெண்களின் நட்பைப் பயன்படுத்திக் கொண்டேன்’ எனக் கூறியுள்ளார்.

Leave a Response