பிறந்தநாளன்று ரசிகர்களுக்கு சூர்யா கொடுக்கப்போகும் பிரமாண்ட விருந்து!

தமிழ் நடிகர்களில் முதல் நிலையில் இருக்கும் பிரபல நடிகர்களில் ஒருவர் சூர்யா. இவருடைய படங்களுக்கு என்று ரசிகர்கள் மத்தியிலும், சினிமா வியாபாரிகள் மத்தியிலும் ஒரு நல்ல வரவேற்பு உண்டு. இவர் படங்கள் பெரும்பாலானவை லாபத்தை ஈட்டி தந்துள்ளது. இருப்பினும் அவருடைய சில படங்கள் பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் இரண்டிலும் தோல்வியை சந்தித்துள்ளது. இருப்பினும் அவருடைய படங்களுக்கு எப்போதும் நல்ல வரவேற்பு உண்டு.

லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், கே.வி.ஆனந்த் இயக்கத்தில், சூர்யா,மோகன்லால், ஆர்யா, சாயீஷா, பூர்ணா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள ‘காப்பான்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்துவிட்டு போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில் இப்படத்தின் பேட்ச் வர்க் கொஞ்சம் இருந்தது. அந்த பேட்ச் வர்க் படப்பிடிப்பு சென்ற சனி கிழமை மற்றும் ஞாயிறு கிழமை(ஜூன் 29, 30) அன்று சென்னையில் நடைபெற்றது. படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பனி தற்போது தீவிரமாக நடைபெற்று வரும் வேளையில், படத்தின் ஒரு பாடலை மட்டும் ஜூலை 5ம் தேதி அன்று ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

அதே போல் ‘காப்பான்’ திரைப்படத்தின் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் படத்தின் பாடல்களுக்கான இசை அமைப்பதில் சற்று மும்மரமாக வேலை செய்து வருகிறார். ஜுலே 23 அன்று சூர்யாவின் பிறந்தநாளான இருப்பதால், ‘காப்பான்’ திரைப்படத்தின் பாடல்களை படக்குழுவினர் வெளியிட உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் சொல்கின்றன. அதே போல் இந்த இசை வெளியீட்டு விழா, இதுவரை சூர்யாவின் படவிழாக்களில் காணாத ஒரு பிரமாண்ட இசை வெளியீட்டு விழாவாக இந்த ‘காப்பான்’ இசை வெளியீட்டு விழா இருக்கும் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதை எல்லாம் பார்க்கும்போது இந்த 2019ம் ஆண்டில் வரும் சூர்யாவின் பிறந்தநாள் இதுவரை சூரியாவும் அவருடைய ரசிகர்களும் கண்டா பிறந்தநாளை விட மிக பிரமாண்ட பிறந்தநாள் விழாவாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கலாம்.

Leave a Response