மகிழ்ச்சியிலும், நம்பிக்கையிலும் NGK படக்குழு…

நீண்ட நாட்கள் பிறகு செல்வராகவன் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் திரைப்படம் ‘நந்தா கோபாலன் குமரன்’ என்கிற ‘NGK’. இத்திரைப்படத்தில் சூர்யா கதாநாயகனாகவும், சாய் பல்லவி மற்றும் ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளனர். இப்படம் பூஜை போட்டு ஆரம்பித்து சுமார் ஒரு வருடத்திற்கும் மேலாக படப்பிடிப்புகள் நடந்து வந்தன. ஒரு கட்டத்தில் இப்படம் வெளியாகாது என புரளிகள் கிளம்பின. அதை பற்றி ஆராய்ந்த ‘ஒற்றன் செய்தி’ இணையதள ஊடகம், இப்படம் கண்டிப்பாக வரும் என்று சொல்லி சூர்யா மற்றும் செல்வராகவன் ரசிகர்களை சந்தோஷப்படுத்தியது. அன்று நாம் சொன்னது உண்மை என்று நிரூபணமாகும் விதமாக இப்படம் மே 31 அன்று உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

NGK படத்தின் முழு ஓட்டம் 2 மணி நேரம் 28 நிமிடங்களாகும். இப்படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியதால், இதன் வியாபாரம் சற்று ஜரூராகவே நடைபெற்றது. இப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை விஜய் டிவி’யும் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமையை ஆமசான் ப்ரைமும் ஒரு நல்ல தொகைக்கு வாங்கியுள்ளனர்.

இதற்க்கு முன்பு வெளியாகிய சூர்யா படங்கள் பெரிய அளவில் வெற்றிபெறவில்லை என்ற குறையை தீர்க்கும் விதமாக, இதுவரை பார்க்காத ஒரு சூர்யாவை இந்த NGK’வில் பார்க்கலாம் என்று படம் பார்த்த சில முக்கிய பிரமுகர்கள் சொல்கின்றனர். சில வருடங்களாக எங்கு இருந்தார் என்று தேடப்பட்டிருந்த செல்வராகவன், இந்த படம் மூலமாக மீண்டும் திரையுலகில் ஒரு பெரிய சுற்று வருவார் என்றும் சொல்லப்படுகிறது.

மொத்தத்தில் படத்தை பார்த்த சூர்யா மற்றும் படக்குழுவினர், இப்படம் ரசிகர்கள் மத்தியிலும் ஜெனெரல் ஆடியன்ஸ் மத்தியிலும் இருக்கும் எதிர்பார்ப்பை கண்டிப்பாக பூர்த்தி செய்யும் என்ற நம்பிக்கையிலும், மகிழ்ச்சிலும் இருக்கிறார்களாம்.

மே 31 அன்று NGK திரைப்படம் உலகெங்கும் வெளியாகிறது. படத்தை பார்த்த பிறகு எங்கள் குழுவினர் விமர்சனத்தை பதிவிடுவார்கள் என்று சொல்லிவிட்டு கிளம்புகிறேன்.

Leave a Response