ஒரு உண்மை சம்பவத்தால் ஈர்க்கப்பட்டு உருவாக்கிய கதை தான் ‘ஹவுஸ் ஓனர்’ – லட்சுமி ராமகிருஷ்ணன்….

2015ம் ஆண்டு சென்னைமட்டும் அதன் சுற்றுப்புறத்தை புரட்டிப்போட்ட சம்பவம், ‘சென்னை வெள்ளம். இந்த வெள்ளத்தினால் பலர் உணவின்றி, பூச்சிகள், பாம்புகள் போன்றவையுடன் அவர்களுடைய வீடுகளில் வெள்ள நீர் தேங்கிய நிலையில் தூக்கமின்றி பல நாட்கள் இருந்தனர். அப்படிப்பட்டவர்கள் பலர் உடல்நலம் பாதிக்கப்பட்டனர், சிலர் உயிரிழந்தனர்.

இந்த சென்னை வெள்ளத்தில், இப்படிப்பட்ட ஒரு சூழலை சந்தித்த ஒருவருடைய வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்வை தான் படமாகியுள்ளார் நடிகையும், இயக்குநருமான லட்சுமி ராமகிருஷ்ணன். இந்த படத்திற்கு ‘ஹவுஸ் ஓனர்’ என்று பெயரையும் வைத்து, படத்தின் முழு படபிடிப்பையும் முடித்துவிட்டு படத்தினை ரிலீசுக்கு தயார் செய்துள்ளார் லட்சுமி.

இப்படம் சென்னை வெள்ளம் சம்பத்தப்பட்ட காட்சிகள் உள்ளதால், அதற்கு செட் போடும் பணியும், பொருட்செலவும் சற்று அதிகம் தான். இந்த சூழலில் படத்தின் இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணன் வெறுநிறு தயாரிப்பாளரை அணுகினால், பவர்கள் இந்த செட்டுக்கு ஒத்துக்கொள்வார்களா என்பது அவருடைய கணவர் ராமகிருஷ்ணனுக்கு ஒரு சந்தகம்! எனவே அவரே இந்த படத்தை தயாரிப்பதற்கு தயரானாராம்.

கணவர் தயாரியப்பாளர், மனைவி இயக்குனர், அடுத்து நடிகர்கள் தேர்வு. இப்படம் ஒரு ராணுவ அதிகாரி கதாபாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்ததால், அந்த பாத்திரத்திற்கு ‘ஆடுகளம்’ கிஷோர் பொருத்தமாக இருப்போர் எனபத்தினால் அவரை தேர்வு செய்தாராம் இயக்குனர் லட்சுமி. அவருடைய மனைவியாக சிவரஞ்சினி நடித்துள்ளார். அவர்களுடன் ‘பசங்க’ கிஷோர் மற்றும் நடிகை விஜி சந்திரசேகர் மகள் லவ்லி சந்திரசேகர் நடித்துள்ளனர். லவ்லி சந்திரசேகர் இப்படம் மூலமாக நடிகையாக அறிமுகமாகிறார்.

முன்பு குறிப்பிட்டதை போல் இப்படத்தில் செட் பணி என்பது ஒரு சவாலாக இருந்துள்ளது. மழைநீர் வெள்ளம் சூழ்ந்துள்ள ஒரு வீடு தேவை என்பதினால், படக்குழுவினர் சுமார் 2000 சதுர அடி தண்ணீர் தொட்டி ஒன்றினை பூமிக்குள் கட்டி, அதற்குள் 1200 சதுர அடி அளவில் ஒரு சிமெண்ட் வீடையே கட்டியுள்ளனர். கட்டியிருக்கும் ஒரு வீடை சுற்றி காம்பவுண்ட் கட்டி அதற்குள் தண்ணியை தேக்கி படப்பிடிப்பு நடத்திருக்கலாமே என்று இயக்குனரை கேட்டதற்கு, அந்த சுவற்றில் எங்காவது சின்ன ஓட்டை விழுந்தாலும் அக்கம் பக்கத்தில் பெரிய சேதம் ஏற்படும் என்பதினால், வீட்டினை பூமிக்குள் கட்டி அதில் படப்பிடிப்பு நடத்தியதாக இயக்குனர் தெரிவித்தார். இந்த சிமெண்ட் வீடு கட்டுவதற்கு மட்டும் சுமார் ஐம்பது லட்சம் ரூபாய் செலவாகியதாம்.

இந்த செட் பணியை செய்வதற்கு சினிமா செட் அமைப்பதற்காக இருந்தால் அதிக பொருட்செலவு ஆகும் என்பதினால், சிமெண்ட் வீட்டை கட்டினால் செலவும் சற்று கம்மியாகவும், தத்ரூபமாக இருக்கும் என்பதினால் சிமெண்ட் வீட்டை கட்டியுள்ளனர் படக்குழுவினர்.

படப்பிடிப்பு, பூமிக்குள் அதுவும் தண்ணீர் நிரம்பியுள்ள ஒரு வீட்டில் என்பதினால், படத்தின் தொழில்நுட்ப கலைஞர்களும், நடிகர்களும் பெரும் சிரமப்பட்டு படத்தில் பணியாற்றியுள்ளனர்.

இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க, கிருஷ்ணா சேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தின் ஒலிவடிவத்தை தபஸ் நாயக் அமைக்க, சி.எஸ்.பிரேம்குமார் படத்தொகுப்பினை மேற்கொண்டுள்ளார். படத்தின் கதை, திரைகதையினை எழுதி, இயக்கியுள்ளார் லட்சுமி ராமகிருஷ்ணன். இப்படத்தினை லட்சுமி ராமகிருஷ்ணன் கணவர் ராமகிருஷ்ணன் ‘மங்கி கிரியேட்டிவ் லேப்ஸ் பிரைவேட் லிமிடெட்’ சார்பாக தயாரித்துள்ளார்.

படத்தின் அனைத்து பணியும் முடிந்துள்ள நிலையில், இப்படத்தின் தணிக்கை இன்னும் ஓர் இரு நாட்களில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் தமிழக உரிமையை ஏ.ஜி.எஸ் சினிமாஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Response