பல காதலில் சிக்கிய நாயகனுக்கு சொந்தத்தில் மணப்பெண்! ஆகஸ்டில் கல்யாணம்!!

இன்றைய இளம் நடிகர்களில் நிஜத்தில் ஒரு காதல் நாயகன், காதலில் நொந்த நாயகன் என்று ஆளாளுக்கு கமெண்ட் அடிக்கப்படும் நடிகர் நம்ம STR என்கிற சிம்பு.

இவர் இந்த 15 வருட காலத்தில் பலருடன் காதலில் சிக்கி சின்னாபின்னம் ஆகினார். பிறகு இது தான் காதலா என தானே வருத்தப்படும் அளவுக்கு காதலை வெறுத்தவர் தான் இந்த சிம்பு.

சிம்புவின் தங்கை இலக்கியாவிற்கு சில வருடங்களுக்கு முன்பு தான் ஒரு கிருத்துவ மதத்தை சார்ந்தவருடன் காதல் திருமணம் இனிதே நடந்தது. சில மாதங்களுக்கு முன்பு தான் சிம்புவின் தம்பியும் இசை அமைப்பாளருமான குறளரசன் இஸ்லாம் மதத்திற்கு மதம் மாறினார். மதம் மாறிய குறளரசனுக்கு சில வாரங்களுக்கு முன்பு தான் ஒரு இஸ்லாமிய பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது.

மூத்தவரான சிம்பு பல காதல்களில் தோல்வியை சந்தித்து வந்த வேளையில், அவருடைய பெற்றோரான நடிகர் டி.ராஜேந்தரும், நடிகை உஷா அவர்களும் சிம்புவிடம் அவருடைய திருமணம் பற்றி பேசியுள்ளனர். அப்போது பேசிய டி.ராஜேந்தர் சினிமா நடிகைகள் வேண்டாம் என்று திட்டவட்டமாக சொல்லியுள்ளார். அதற்கு உஷாவும் ஆமாம் என்று சொல்ல, புரிந்துகொண்ட சிம்பு சரி என தலையாட்டியுள்ளார்.

சிம்புவுக்கு தன்னுடைய சொந்தத்தில் பெண் பார்க்கலாம் என டி.ராஜேந்தர் சொல்ல அதற்கு உஷா நோ சொன்னாராம். பிறகு, உஷா தன்னுடைய உறவினர்கள் மற்றும் சொந்தக்காரர்கள் வகேயேறாவில் பெண் பார்க்கலாம் என்று ஆலோசனை சொல்ல, குடும்பமே ஓகே சொன்னதாம்.

விஷயம் என்னவென்றால், சிம்புவுக்கு பெண் பார்த்துவிட்டார்களாம், அதுவும் அம்மா உஷாவின் உறவினராம் அந்த பெண். முக்கிய குறிப்பு….அந்த பெண்ணின் ஜாதகமும், சிம்புவின் ஜாதகமும் நன்றாக பொருந்தியுள்ளதாம்.

லேட்டஸ்ட் தகவல், சிம்புவுக்கும், அவருடைய அம்மா வழி சொந்தத்தில் பார்க்கப்பட்டிருக்கும் மணப்பெண்ணுக்கும் இந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் திருமணம் செய்யப்போவதாக அவர்களுடைய குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் சொல்கின்றன.

வாழ்த்துக்கள் சிம்பு….

Leave a Response