நிலாவில் இருந்திருப்பேன்! சிம்பு அடித்த கமெண்ட்!!

“Etcetera Entertainment’ மற்றும் ‘மாலிக் ஸ்ட்ரீம்ஸ்’ இனைந்து தயாரித்துள்ள திரைப்படம் “மகா”. இப்படத்தில் ஹன்சிகா மோத்வானி கதையின் நாயகியாக நடித்துள்ளார். இப்படம் ஹன்சிகா மோத்வானியின் 50வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் சிம்பு சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் என்றாலும், அவர் இப்படத்தில் சுமார் நாற்பது நிமிடங்கள் நடித்துள்ளார் என்பது தான் உண்மை. எனவே இப்படத்தில் சிம்பு சிறப்பு தோற்றம் என்பது ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம் தான்.

சிம்பு படம் என்றாலே, அந்த படத்தில் சண்டை காட்சிகள் மற்றும் அதிரடி வசனங்களும் கண்டிப்பாக நிறைந்திருக்கும். அப்படி தான் இந்த படத்திலும் சிம்பு நடித்துள்ளார். இப்படத்தில் சிம்பு, ‘மாலிக்’ என்ற பெயர் கொண்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ‘மகா’ படத்தின் ஒரு கட்ட படப்பிடிப்பு கோவாவில் நடைபெற்றது. அதில் வில்லன்களுடன் மோதும் சிம்புவின் காட்சிகள் படமாக்கப்பட்டன. இப்படத்திற்கான கார் சேசிங் காட்சிகள் எடுக்கும் போது, சிம்பு ஓட்டிச்சென்ற காரின் பிரேக் சரியாக செயல்படாமல் போய்விட்டது. இதை பார்த்த பட குழுவினர் பதறி போய்விட்டார்கள். கார் ஓட்டுவதை வாடிக்கையாக கொண்ட சிம்பு, பிரேக் பிடிக்காத காரை லாவகமாக நிறுத்தியுள்ளார். இந்த சேசிங் காட்சிகளை பார்த்துக்கொண்டிருந்த பொதுமக்கள் சிம்புவின் சாமர்த்தியத்தை பார்த்து கைதட்டி கோஷமிட்டு பாராட்டியுள்ளனர்.

ஒரு காட்சியில் சிம்பு, பேபி மனஸ்வியை தூக்கிக்கொண்டு படியில் ஓடவேண்டி இருந்ததாம். ஏதோ தொழில்நுட்ப குளறுபடியால் அந்த காட்சியில் சிம்பு பலமுறை நடிக்கவேண்டி இருந்துள்ளது. படப்பிடிப்பு குழுவினரின் சிரமத்தை அறிந்த சிம்பு, “எப்பா ஆர்ட் டைரக்டர் படிக்கட்டை வளைத்து போட்டான், நேரா போட்டு இருந்தானா இப்ப நான் நிலாவில இருந்திருப்பேன்” என்று கிண்டலாக கமெண்ட் அடித்துள்ளார். சிம்புவின் இந்த கிண்டல் கமெண்டை கேட்ட யூனிட்டில் இருந்த அத்தனை பெரும் சிரித்துள்ளனர்.

இப்படத்தில் ஹன்சிகா மற்றும் சிம்புவுடன் ஸ்ரீகாந்த் ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். இவர்களுடன் தம்பிராமையா, கருணாகரன், பேபி மனஸ்வி மற்றும் பலர் நடித்துள்ளனர். ஜூலை 22, 2002 அன்று உலகெங்கும் வெளியாகவிருக்கும் இந்த “மகா” திரைப்படத்திற்கு லெக்ஷ்மன் ஒளிப்பதிவு செய்ய, ஜிப்ரான் இசையமைக்க, ஜான் ஆபிரகாம் படத்தொகுப்பு செய்ய, அறிமுக இயக்குநர் யு.ஆர். ஜமீல் இயக்கியுள்ளார். “Etcetera Entertainment’ சார்பாக மதியழங்கன் மற்றும் ‘மாலிக் ஸ்ட்ரீம்ஸ்’ இனைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.

Leave a Response