ஆயிரம் ஸ்டாலின், ஆயிரம் தினகரன் வந்தாலும் அதிமுக அரசை ஒன்றும் செய்ய முடியாது – ஓபிஎஸ்..!

ஆயிரம் ஸ்டாலின், ஆயிரம் தினகரன் வந்தாலும் அதிமுக அரசை தொட்டு பார்க்க முடியாது என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

அரவக்குறிச்சி தொகுதி அதிமுக வேட்பாளர் செந்தில் நாதனை ஆதரித்து ஓ.பன்னீர்செல்வம் பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர், திமுக ஆட்சியில் மின்சார தட்டுப்பாடு இருந்ததாக சுட்டிக்காட்டினார். ஆனால், ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு பொறுப்பேற்ற நாள் முதல், தற்போது வரை, தமிழ்நாடு மின்மிகை மாநிலமாக திகழ்ந்து கொண்டிருப்பதாக, அவர் பெருமிதம் தெரிவித்தார்.

தமிழகத்தில் குடிசைகளில் வாழும் அனைவருக்கும் வருகிற 2023-ம் ஆண்டுக்குள் கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும் என்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உறுதியளித்தார்.

முன்னதாக, அ.தி.மு.க.வின் 47 ஆண்டுகால வரலாற்றில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோருக்கு துரோகம் செய்து தனிக்கட்சி ஆரம்பித்தவர்கள் உருப்பட்டதாக வரலாறு இல்லை என்றும் சாடினார்.

Leave a Response