மே 10 வெளியாகிறது விஷால் நடிப்பில் “அயோக்யா”..!

வெங்கட் மோகன் இயக்கத்தில், விஷால் – ராஷி கண்ணா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘அயோக்யா’ படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளராக பணியாற்றிய வெங்கட் மோகன் இயக்குநராக அறிமுகமாகும் ‘அயோக்யா’ படத்தில் விஷால் – ராஷி கண்ணா இணைந்து நடித்துள்ளனர். இவர்களுடன் பார்த்திபன், ராதாரவி, கே.எஸ்.ரவிகுமார், ஆடுகளம் நரேன், வம்சி, சோனியா அகர்வால், சச்சு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இப்படம் வருகிற 10-ம் தேதி ரிலீசாக இருக்கிறது. இந்நிலையில், இப்படத்தின் சென்சார் ரிசல்ட் வெளியாகியுள்ளது. சென்சாரில் யு/ஏ சான்றிதழ் பெற்ற இப்படம் 10ம் தேதி வெளியாவது உறுதியாகியுள்ளது.

லைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ் சார்பில் பி.மது தயாரித்துள்ள இந்த படத்தை ஸ்கிரீன் சீன் மீடியோ நிறுவனம் வெளியிடுகிறது. தெலுங்கில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘டெம்பர்’ படத்தின் தமிழ் ரீமேக்காக இந்த படம் உருவாகி இருக்கிறது.

Leave a Response