கருணாநிதியாலேயே அதிமுகவை ஒன்றும் செய்ய முடியவில்லை; கமல் ஹாசனால் என்ன செய்ய முடியும் – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி..!

ராஜதந்திரி என்று பெயர் எடுத்த கருணாநிதியாலேயே அதிமுகவை ஒன்றும் செய்ய முடியவில்லை; கமல் ஹாசனால் என்ன செய்ய முடியும்?என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீண்டும் கமலுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

“இந்துக்களை தீவிரவாதி என்று கூறும் கமல், தொடர்ந்து தான் கூறியது சரித்திர உண்மை என்றும் கூறியுள்ளார். அவர் சரித்திர உண்மை என்று கூறி தரித்திரத்தை தான் விலைக்கு வாங்குகிறார். சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என்றால் அதற்கு முன்னால் இந்தியாவில் எவ்வளவு கசப்பான சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. அதெல்லாம் வரலாற்றில் மறைக்கப்படவேண்டிய, மாணிக்கப்படவேண்டிய சம்பவங்கள். அதையெல்லாம் இப்போது பேசினால் மத நல்லிணக்கம் கெடும்.

இந்தியாவின் குடிமகன் ஒரு சராசரி மனிதனே அதைப்பற்றி பேசாத போது ஒரு நடிகரான கமல் பேசலாமா? அரவக்குறிச்சியில் அவர் பேசியது அங்குள்ள சிறுபான்மை மக்களிடம் வாக்குகளை பெறவே. ஆனால், அவர் விஸ்வரூபம் படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரித்து காண்பித்ததை மக்கள் மறக்க மாட்டார்கள்.

ராஜ தந்திரி என பெயர் எடுத்த கருணாநிதியாலேயே அதிமுகவை அழிக்க முடியவில்லை. ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக ஆட்சி அழிந்து போய்விடும் என்று எதிர்கட்சிகள் கூறிய நிலையில் எடப்பாடி ஆட்சி வெற்றிகரமாக நடந்து வருகின்றது.

கமல் கத்துக்குட்டி தான். கமல், ஒரு கருத்தை கூறிவிட்டால் பெரிய ஆளாகிவிட முடியாது. கமல் ஒரு கவுன்சிலர் தேர்தலில் கூட வெற்றி பெற முடியாது. கமல் எவ்வளவு வாக்குகள் பெறுகிறார்கள் என்று தேர்தல் முடிவு அன்று தெரியும்.

Leave a Response