சென்னை அருகில் இருக்கிறது பொன்னேரி. இந்த ஊரில் வசிக்கும் ரோஸ் பொன்னையன் ஒரு தி.மு.க பிரமுகர். அதுமட்டுமின்றி அவர் நடிகர் அருள்நிதியின் ரசிகருமாம்! அருள்நிதி நடிப்பில் தயாராகியுள்ள “K 13” திரைப்படம் மே 3 அன்று உலகமெங்கும் வெளியாகிறது.
இதன் காரணமாக அருள்நிதியின் ரசிகரான ரோஸ் பொன்னையன், ஏப்ரல் 30’ம் தேதி முதல் சுமார் 20 சிறிய வேன்களில் தணண்ணீர் பாட்டில்களை எடுத்து கொண்டு சென்னையில் ஆங்காங்கே வெயிலில் பயணிப்பவர்களுக்கு இலவசமாக கொடுத்து வருகிறார்.
ரோஸ் பொன்னையனின் இந்த இலவச தண்ணீர் பாட்டில் வழங்கும் செயல், வெயிலில் பயணிக்கும் மக்களுக்கும் உதவியாக இருக்கிறது, அதே போல “K 13” படத்தின் விளம்பரமாகவும் இருக்கிறது. இலவச தண்ணீர் பாட்டில் வாங்கிய அனைவரும் “K 13” பார்க்க போகிறார்களோ இல்லையோ, ரோஸ் பொன்னையாவை கண்டிப்பாக மனதில் நினைவு வைப்பார்கள்.