முதன்முறையாக களத்தில் சந்திக்கவிருக்கும் இரு கதாநாயகர்கள்

‘சூப்பர்குட் ஃபிலிம்ஸின் 90வது படம் “களத்தில் சந்திப்போம்”. ஆர்.பி.சௌத்திரி தயாரிக்கும் இப்படத்தில்
ஜீவா, அருள்நிதி இருவரும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். பல மாதங்களுக்குப் பிறகு திரையரங்குகளில் படங்கள் ரிலீஸ் ஆகப்போகும் நேரத்தில், இத்திரைப்படம் தீபாவளிக்கு ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதன் முறையாக ஜீவாவும், அருள்நிதியும் இணையும் இப்படத்தில், கதாநாயகிகளாக மஞ்சிமா மோகன், பிரியா பவனி சங்கர் நடிக்க, காரைக்குடி செட்டியாராக “அப்பச்சி” என்ற வித்யாசமான வேடத்தில் ராதாரவி நடிக்கிறார். இவர்களுடன் ரோபோசங்கர், பால சரவணன் நகைசுவை வேடத்திலும் இளவரசு, ஆடுகளம் நரேன், மாரிமுத்து, வேலராமமூர்த்தி, ரேணுகா, ஸ்ரீரஞ்சனி, பூலோகம் ராஜேஷ், பெனிடோ ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள் .

இவர்களுடன் “பிசாசு” பட புகழ் பிரக்யா மார்ட்டின் கௌரவ வேடத்தில் தோன்றுகிறார் .

“களத்தில் சந்திப்போம்” படம் இரண்டு நண்பர்களுக்குள் உள்ள நட்பை மையமாக வைத்து எடுக்கப்பட்ட அதிரடி ஆக்சன் கமர்சியல் படமாக உருவாகியுள்ளது. நட்பு, காதல், நகைச்சுவை, அதிரடி என அனைத்து அம்சங்களும் நிறைந்த ஜனரஞ்சக படம் இது .

நீண்ட நாட்களுக்குப் பிறகு இப்படி ஒரு பிரம்மாண்டமான நடிகர் கூட்டத்துடன் ஒரு படம் திரைக்கு வர இருப்பதால் திரையரங்க உரிமையாளர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். மேலும் இரண்டு ஹீரோக்கள் சேர்ந்து நடிப்பது தமிழ் சினிமாவில் மிக அரிதாகவே நடக்கும் விஷயம் என்பதால் அனைவரின் கவனத்தையும் பெற்று வெளியாகத் தயாராக இருக்கிறது.

தற்போது “களத்தில் சந்திப்போம்” படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. டீசரை நடிகர் ஆர்யா மற்றும் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி ஆகியோர் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர் .

இப்படத்திற்கு கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருப்பவர் N .ராஜசேகர். இசை யுவன் சங்கர் ராஜா.

Leave a Response