செல்வராகவன் இயக்கத்தின் மீதும், எழுத்தின் மீதும் எனக்கு தீராத காதல் உண்டு – நடிகர் சூர்யா..!

செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா அரசியல் வாதியாக நடிக்கும் படம் என்.ஜி.கே. நீண்ட இடைவெளிக்குப் பிறகு செல்வராகவன் இயக்கத்தில் வெளியாகும் படம் என்பதாலும், முதல் முறையாக செல்வா – சூர்யா கூட்டணி இணைவதாலும் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

நேற்று இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் பேசிய சூர்யா, ‘ செல்வராகவன் ஒவ்வொரு நாள் படப்பிடிப்பிலும் புது படத்திற்கு செல்வது போல இருந்தது. நேற்று நடந்த படப்பிடிப்பின் தொடர்ச்சி இருக்காது. நேரம் ஆனாலும் பணியாற்றிக் கொண்டிருந்தார். மின்சாரம் தடைப்பட்டு வந்து கொண்டிருந்ததால் இசையை முழுமையாக கேட்க முடியவில்லை.

செல்வராகவனின் இயக்கத்திலும் சரி, டப்பிங்கிலும் நுணுக்கமாக பார்த்து பார்த்து செல்வார். அவருடைய இயக்கத்திலும், எழுத்திலும் எனக்கு தீராத காதல் உண்டு. செல்வாவின் இயக்கத்தில் ஆத்மார்த்தமாக நடித்திருக்கிறேன். என்னுடைய துறையில் இப்படம் ஒரு முக்கியமான படமாக இருக்கும்.

 

Leave a Response