மக்களோடு மக்களாக நின்று பார்த்தால் புரியும் சோகம்,தெரியும் உண்மை – கமல்ஹாசன் தமிழக அரசை விமர்சனம் ..!

கஜா புயல் கோர தாண்டவம் குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இதோ வருகிறேன், அதோ வருகிறேன் என கூறி ஒரு வழியாக செவ்வாய்க்கிழமை ஹெலிகாப்டரில் ஆய்வு செய்ய சென்றார்.

குறிப்பிட்ட பகுதியில் ஆய்வு மேற்கொள்ளாமல் திடீரென தனது ஆய்வு பணியை நிறுத்திவிட்டு சென்றுவிட்டார். இது பெரும் விமர்சனங்களுக்குள்ளானது. இதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிச்சாமி, தான் தாழ பறந்த படியே புயல் பாதிப்பு பகுதிகளை ஆய்வு செய்ததாக விளக்கினார்.

இந்நிலையில் கஜா புயலினால் பாதிப்படைந்த பகுதிகளுக்கு நேரடியாக சென்று கமல்ஹாசன் பார்வையிட்டு வருகிறார். அவர் மக்களோடு மக்களாக சந்தித்து குறைகளையும் கேட்டறிந்தார்.

அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில்

தரையில் கால் பாவிட, மக்களோடு மக்களாக நின்று பார்த்தால், கேட்டால்… புரியும் சோகம், தெரியும் உண்மை! ஹெலிகாப்டரில் எவ்வளவு தாழப்பறந்தாலும் இவை தெரியாது. கேட்கிறதா அரசுக்கு? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Leave a Response