காமத்தின் உச்சத்தை தொடும் விமல் ஆஷ்னா சவேரி…

விமல் – ஆஷ்னா சவேரி நடிக்கும் கிளாமர் ஹுயூமர் படம் “இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு”. சாய் புரொடக்சன் பட நிறுவனம் சார்பில் சார்மிளா மாண்ரே ஆர்.சர்வண் இணைந்து இப்படத்தினை தயாரிக்க ஏ.ஆர்.முகேஷ் இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் விமல் கதாநாயகனாகவும், ஆஷ்னா சவேரி கதாநாயகியாகவும் நடிக்கிறார்கள்.

இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிவடைந்து, இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. அதில் படத்தில் நடித்த விமல், ஆஷ்னா சவேரி, பூர்னா, ஆனந்தராஜ், மன்சூர் அலி கான், சிங்கம்புலி, கே.ராஜன், படத்தின் இசையமைப்பாளர் நடராஜன் சங்கரன், ஒளிப்பதிவாளர் கோபி ஜெகதீஸ்வரன் மற்றும் படத்தில் நடித்த சில நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் கலந்துகொண்டனர்.

படம் பற்றி இயக்குனர் கூறியதாவது…

“இது கிளாமர் கலந்த ஹூயூமர் படம் என்று ஆரம்பத்திலேயே கூறி இருக்கிறோம்..

சினிமா என்பதே ஏழு வகையான கதையமைப்பு கொண்டவை தான்..இதற்குள் தான் எல்லா படங்களுமே அடங்கும்.

கிளாமரையும், நகைச்சுவையையும் சரிவிகிதத்தில் கலந்து திரைக்கதையை அமைத்துள்ளோம் என்கிறார் AR.முகேஷ்

அதில் ஒரு வகை கிளாமர் ஹுயூமர்…அதைத் தான் இதில் கையாண்டிருக்கிறோம்.

கிளாமரிலும் எல்லை மீறாத அளவையே தொட்டிருக்கிறோம்.

இந்த படத்தின் படப்பிடிப்பு லண்டனில் 20 நாட்களும் , சென்னை, தென்காசி, குற்றாலம் பகுதிகளில் 30 நாட்களும் நடைபெற்றது.” இவ்வாறு இப்படத்தின் இயக்குனர் பேசினார்.

என்னட `காமத்தின் உச்சத்தை தொடும் விமல் ஆஷ்னா சவேரி` என்ற தலைப்பு போட்டிருக்கிறார்களே என்று பார்க்குறீர்களா? எல்லாம் உன்மைத்தான்!

இந்த படத்தில் நாயகன் விமலும், நாயகி ஆஷ்னா சவேரியும் கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்கும் நெருக்கமான காட்சி அமைந்துள்ளது. அந்த காட்சி இசை வெளியீட்டில் திரையிடப்பட்டது. அந்த காட்சி விமலும், ஆஷ்னா சாவேரியும் காமத்தின் உச்சத்திற்கே சென்றதை போல் தோன்றும் அளவுக்கும் நெருக்கமாக நடித்துள்ளனர் என்பதை அப்பட்டமாக பிரதிபலிக்கிறது. திரைப்படத்தின் புகைப்படங்களும் விமல் ஆஷ்னா சவேரி மட்டுமுடன் நெருக்கமாக நடிக்கவில்லை மற்ற நடிகைகலுடனும் நெருக்கமாக நடித்துள்ளார் என்பதை சொல்கிறது. இந்த கட்டுரையின் தலைப்பை உறுதி செய்யும் விதமாக, அப்படத்தில் நடித்த நடிகர்கள் சிங்கம்புலி, மன்சூர் அலி கான், கே.ராஜன் ஆகியோர் பேசும்போது கூறியதாவது, ‘விமல் இந்த படத்தில் நடிக்கவில்லை வாழ்ந்து இருக்கிறான் என்ற குறிப்பிட்டனர்.

படத்தின் முன்னோட்ட காட்சிகளை பார்க்கும்போது சமீபத்தில் இளைஞர்களை ஈர்த்த ‘ஹரஹர மஹாதேவி’, ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ ஆகிய படங்களின் வரிசையில் இந்த ‘இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’ திரைப்படமும் ஒரு அடல்ட் காமெடி ஜோனரில் வரக்கூடிய படமாக இருக்கும் என்பது அப்பட்டமாக தெரிகிறது. படத்தின் புகைப்படங்களை பார்க்கும்போது இந்த படம் தணிக்கைக்கு செல்லும் போது கண்டிப்பாக வெட்டு இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்றும் தோன்றுகிறது.

இந்த படத்தில் விமல் மற்றும் ஆஷ்னா சவேரி ஆகியோருடன் ஆனந்த ராஜ், சிங்கம்புலி, மன்சூரலிகான், லோகேஷ், வெற்றி வேல்ராஜ், ஆத்மா ஆகியோருடன் போலீஸ் அதிகாரி வேடத்தில் பூர்ணா நடிக்கிறார். படத்தின் ஒளிப்பதிவை கோபி ஜெகதீஸ்வரன் செய்ய, பாடல்களை விவேகா எழுத, நடராசன் சங்கரன் இசையமைத்துள்ளார். கலை பணியை வைரபாலன் பார்க்க, நடன கலையை கந்தாஸ் வடிவமைக்க, தினேஷ் படத்தொகுப்பினை செய்துள்ளார். ஏ.ஆர்.முகேஷ் இப்படத்தினை இயக்கியுள்ளார்.

படம் விரைவில் தணிக்கைக்கு அனுப்பப்பட்டு திரைக்கு வெளிவரவுள்ளது.

Leave a Response