ஆளுநரை முதல்வர் சந்திப்பதால் எந்த பயனும் இல்லை-திருமாவளவன்..!

ஆளுநரை முதல்வர் சந்திப்பதால் எந்த பயனும் இல்லை என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது காவிரி விவகாரத்தில் பிரதமரை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சந்திக்க முடியாதது வருத்தமளிக்கிறது என அவர் கூறினார்.

இன்று மாலை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை முதல்வர் சந்திப்பதால் எந்த பயனும் இல்லை என்றும் அவர் கூறினார். மேலும் டெல்டா மாவட்டங்களில் மக்கள் போராட்டம் வெடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் திருமாவளவன் கூறினார்.

ஓஎன்ஜிசிக்கு எதிராக மக்கள் கொந்தளித்துள்ளதாக கூறிய திருமாவளவன், டெல்டாவில் துணை ராணுவம் குவிக்கப்பட்டது கண்டனத்துக்குரியது என்றும் அவர் கூறினார்.

பிரதமரை முதல்வரால் சந்திக்க முடியவில்லை என்பது வெட்கப்பட வேண்டிய விஷயமாக இருப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சென்னையில் பேட்டியளித்துள்ளார்.

கதிராமங்கலத்தில் மத்திய படையை கொண்டு வந்து நிறுத்தியதற்கு திருமாவளவன் கண்டனம் தெரிவித்தார். தமிழ்நாட்டையும் தமிழ் மொழியையும் பா.ஜ.க திட்டமிட்டு வஞ்சித்து வருகிறது எனவும் அவர் தெரிவித்தார்.

Leave a Response