5 ஆயிரம் ரூபாய் கொடுத்தாலும் கூட அதிமுக – பாஜக கூட்டணி வெற்றி பெறாது : ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்..!

ரூ.1,000 அல்ல; ரூ.5,000 கொடுத்தாலும் அதிமுக – பாஜக கூட்டணி ஜெயிக்காது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கருத்து தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: அதிமுகவினர் தோல்வி பயத்தில் மிகவும் மிரண்டு போயிருக்கிறார்கள். ஆகவே, எப்படியாவது டெபாசிட் வாங்க வேண்டும் என்பதற்காக 1000 ரூபாய், 1,500 ரூபாய் என சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்.

ஒரு ஓட்டுக்கு 5 ஆயிரம் ரூபாய் கொடுத்தாலும் கூட அதிமுக – பாஜக கூட்டணி ஒரு இடத்தில் கூட வெற்றி அடையாது என்றும் கூறினார். மேலும், ஹெச்.ராஜா ஒரு முந்திரிக் கொட்டை என்றும் மேலிடம் அறிவிப்பதற்கு முன்பே அவர் வேட்பாளர் பட்டியலை அறிவித்திருக்கிறார் என்றும் தெரிவித்தார்.

கட்சி மேலிடம் அறிவிக்கும்போது அவர் வேட்பாளர் பட்டியலில் இருக்கிறாரா அல்லது ஆட்டுப்பட்டியில் இருக்கிறாரா என்பதைப் பார்க்கலாம் எனவும் கிண்டலாக பேசினார்.

Leave a Response