பாஜக அரசின் துரோகத்தை தமிழக மக்கள் மன்னிக்கமாட்டார்கள்-ஸ்டாலின்

மத்திய அரசின் மஹரிஷி பத்ராயன் வியாஸ் சம்மான் விருதில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டதற்கு திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் மஹரிஷி பத்ராயன் வியாஸ் சம்மான் விருதில் தமிழ் புறக்கணிக்கப்பட்டு உள்ளது. இதில் பரிந்துரைக்கு கூட தமிழ் மொழி அனுப்பப்படவில்லை. இது பெரிய அளவில் சர்ச்சையை உருவாக்கி உள்ளது.

இதுகுறித்து ஸ்டாலின் பேட்டி அளித்துள்ளார். அதில் ”சமஸ்கிருதத்தை தங்கக்கட்டிலில் சீராட்ட விரும்பும் மத்திய அரசு அன்னை தமிழை அவமானம் செய்கிறது. தமிழ் மொழி புறக்கணிக்கப்படுவது மூலம் மத்திய பாஜக அரசின் பாகுபாட்டு உணர்வையும், வெறுப்பையும் வெளிப்படுகிறது. விருதுகள் பரிந்துரைக்க அனுப்பிய கடிதத்திலேயே தமிழ் மொழி இடம் பெறவில்லை” என்றுள்ளார்.

மேலும் ”பாஜக அரசின் துரோகத்தை தமிழன் மன்னிக்கமாட்டான். தமிழ் மொழி மேல் பற்றுள்ளவர்கள் போல், பாஜக தலைவர்கள் வெறும் வார்த்தைகளால் கபட நாடகம் ஆடுகிறார்கள். மத்திய அரசின் விருதுகளில் தமிழ் மொழி புறக்கணிக்கப்படுகிறது. குடியரசு தலைவர் மற்றும் மஹரிஷி பத்ராயன் வியாஸ் சம்மான் விருதுகளில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளது கண்டனத்திற்குரியது” என்றும் ஸ்டாலின் பேசியுள்ளார்.

Leave a Response