தாமிரபரணி தண்ணீர் ஒட்டபிடாரம் மக்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் – முதலமைச்சர் பழனிசாமி..!

தாமிரபரணி தண்ணீர் ஒட்டபிடாரம் மக்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.

தாமிரபரணி தண்ணீர் ஒட்டபிடாரம் மக்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிமுக வேட்பாளர் மோகனை ஆதரித்து முதலமைச்சர் பழனிசாமி பேசினார். ஒட்டபிடாரம் தொகுதி அதிமுக வேட்பாளர் மோகனை ஆதரித்து தருவைகுளத்தில் முதலமைச்சர் பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது:

இப்போது திண்ணைகளில் அமர்ந்து மக்கள் குறையை கேட்கும் ஸ்டாலின், துணை முதலமைச்சராக இருந்த போதே செய்திருக்க வேண்டும். திண்ணை பிரச்சாரத்தின் போது வாங்கிய மனுக்களை ஸ்டாலின் யாரிடம் கொடுப்பார்?

தருவை குளத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்து தரப்படும். தாமிரபரணி தண்ணீர் ஒட்டபிடாரம் மக்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஸ்டாலின் முதலமைச்சராகமாட்டார், ஜனாதிபதியாகத்தான் ஆவார் என துரைமுருகனே கூறியுள்ளார். இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Response