தூத்துக்குடியில் தாக்கல் செய்த வேட்புமனுவை வாபஸ் பெற்றார் “கவுதமன்”..!

தூத்துக்குடி மக்களவை தேர்தலில் திமுக, பாஜக, அமமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகள் தேர்தலில் போட்டியிடுகின்றன. இதேபோல் அண்மையில் புதிதாக தமிழ் பேரரசு கட்சி என்ற அரசியல் அமைப்பை தொடங்கினார் இயக்குநர் கவுதமன்.

இவரும் தூத்துக்குடி லோக்சபா தேர்தலில் போட்டியிட வேட்புமனுவை தாக்கல் செய்தார். நேற்று முன் தினத்துடன் வேட்பு மனு தாக்கல் செய்வது ஓய்வடைந்தது.

இந்த நிலையில் திடீரென தான் தாக்கல் செய்த வேட்புமனுவை இயக்குநர் கவுதமன் திடீரென வாபஸ் பெற்றார். இதுகுறித்து அவர் கூறுகையில் ஏப்ரல் 18-இல் தூத்துக்குடியில் நடைபெறவுள்ளது தேர்தல் அல்ல. ஜனநாயக படுகொலை.

அரசு பெட்ரோலிய நிறுவனத்தில் இயக்குநராக உள்ளார் தமிழிசை. ஆனால் இதை மறைத்து தமிழிசை தாக்கல் செய்த வேட்புமனுவை தேர்தல் அதிகாரிகள் பெற்றுள்ளனர். எனவே எனது வேட்புமனுவை வாபஸ் பெறுகிறேன் என்றார் கவுதமன்.

Leave a Response