தமிழகத்தில் வெற்றி பெற்றுள்ள எம்பிக்கள் காதறுந்த ஊசிகள் – தமிழக பாஜக தலைவர் தமிழிசை டிவிட்..!

தமிழகத்தில் வெற்றி பெற்றுள்ள எம்பிக்கள் காதறுந்த ஊசிகள் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

மக்களவை தேர்தலில் பாஜக நாடு முழுவதும் அமோக வெற்றி பெற்றது. இதனால் அக்கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்தது. ஆனால் தென்னிந்தியாவில் எதிர்பார்த்த அளவுக்கு பாஜகவுக்கு இடம் கிடைக்கவில்லை. குறிப்பாக தமிழகத்தில் பாஜக படுதோல்வியடைந்தது.

பாஜக வேட்பாளர்கள் தங்களை எதிர்த்து போட்டியிட்ட எதிர்க்கட்சி வேட்பாளர்களிடம் கொஞ்சம் கூட போட்டி கொடுக்காமல் மிக எளிதாக லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் மோசமாக தோல்வியடைந்தனர்.

பாஜக கூட்டணிக்கு தமிழகத்தில் ஒரே ஒரு இடம் தான் கிடைத்தது. அதுவும் ஆளும் அதிமுகவுக்கு தான். தேனி தொகுதியில் வெற்றி பெற்ற துணை முதல்வர் ஓபிஎஸின் மகன் ஓபி ரவீந்திரநாத்தான் அந்த எம்பி.

இதைத்தொடர்ந்து மத்திய அமைச்சரவையில் அதிமுகவுக்கு இடம் கொடுக்கப்படும் என பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்டது. ராஜ்ய சபா எம்பி வைத்தியலிங்கம் மற்றும் லோக்சபா எம்பி ரவீந்திரநாத் ஆகியோரின் பெயர்கள் அடிப்பட்டன. ஆனால் இருவருக்குமே இடமளிக்கப்படவில்லை.

அமைச்சரவை விரிவாக்கத்தின் போது இடம் கொடுக்கப்படலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் காதறுந்த ஊசிகள் தைக்கப்பயன்படுமா? வேண்டுமானால் குத்திப்பார்க்கலாம். இதுதான் தமிழகத்தில் வெற்றி பெற்ற எம்பிக்களின் நிலைமை.

Leave a Response