அதிமுகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன்..!

முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன் அமமுக.வில் இருந்து விலகி இன்று அ.தி.மு.க.வில் இணைந்தார்.

அதிமுக.வில் முக்கிய நிர்வாகிகளில் ஒருவராக இருந்த தாமரைக்கனியின் மகன் இன்பத்தமிழன் 2001-ஆம் ஆண்டு அ.தி.மு.க. சார்பில் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் தமிழக விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக இருந்தார்.

2006-ஆம் ஆண்டு திமுக.,வில் இணைந்த இன்பத்தமிழன் அமமுக.வில் இருந்து இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுக.வில் இணைந்தார். அப்போது அமைச்சர் ராஜேந்திரபாலாஜி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

இது குறித்து எடப்பாடி பழனிசாமி தனது டிவிட்டர் பதிவில் வெளியிட்டுள்ள தகவல் இதோ :

Leave a Response