தென் தமிழகத்தில் மிகக் கனமழை பெய்யலாம்! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Cyclone_Debbie_Strikes_Australia

தென் தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்துக்கு கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்ய வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தமிழகம் முழுவதும் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து வருகிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட வட மாவட்டங்களிலும் திருவாரூர், நாகை, தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலும் கன்னியாகுமரி, நெல்லை உள்ளிட்ட தென்மாவட்டங்களிலும் கடந்த ஒரு மாதத்தில் பரவலாக மழை பெய்தது. இந்தநிலையில், தென்மேற்கு வங்காள விரிகுடாவில் இலங்கை கடற்கரையை ஒட்டிய பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வுநிலை உருவாகியுள்ளதால், அடுத்த 48 மணி நேரத்துக்குத் தென் தமிழகத்தின் அநேக இடங்களில் கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

அதேபோல், தென் தமிழகம் மற்றும் கேரளாவின் தென் பகுதியில் உள்ள கடலில் காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என்றும், காற்றின் வேகம் மணிக்கு அதிகபட்சமாக 65 கி.மீ வரை இருக்கக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடல் சீற்றத்துடன் காணப்படும் என்பதால் தென் தமிழகம் மற்றும் கேரளாவின் தென்பகுதி மீனவர்கள் அடுத்த 48 மணி நேரத்துக்கு கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

Leave a Response