கன்னியாகுமரி அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம்: பாம்பனில் 3-ம் எண் புயல் கூண்டு ஏற்றம்

201706121306099415_Pamban-harbor-1-number-Storm-warning-cage_SECVPF

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு பகுதி காற்றழுத்த மண்டலமாக வலுவடைந்து நிலைகொண்டுள்ளதால் பாம்பன் துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

இலங்கைக்கு அருகே தென்மேற்கு வங்க கடலில் சில நாட்களுக்கு முன் காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. அது காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியதால் தென் தமிழகத்திலும், கடலோர மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வந்தது.

புதன்கிழமை காற்றழுத்த தாழ்வு நிலை மேலும் தீவிரம் அடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி இலங்கை அம்பந்தோட்டாவிலிருந்து 80 கி.மீ. தொலைவிலும் கன்னியாகுமரிக்கு 500 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. வியாழக்கிழமை வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து கன்னியாகுமரி அருகே மையம் கொண்டிருக்கும். இதன் காரணமாக கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

201710191551172440_category-1-Storm-warning-cage-warning-in-cuddalore-pamban_SECVPF

இதனால் ராமநாதபுரம் மாவட்டத்தில் தனுஷ்கோடி, ராமேசுவரம், பாம்பன், மண்டபம், தொண்டி, எஸ்.பி. பட்டிணம், கீழக்கரை, வாலிநோக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மீனவர்கள் யாரும் ஆழமான கடற்பகுதிற்குள் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் பாம்பன் பகுதி மன்னார் வளைகுடா மற்றும் பாக்ஜலசந்தி கடற்பகுதியில் கடல் கொந்தளிப்புடனும் மணிக்கு 50 கி.மீ. வேகத்திற்கும் அதிகமாக காற்று வீசியதால் பாம்பன் ரயில் பாலத்தில் குறைந்த வேகத்தில் ரயில்கள் இயக்கப்பட்டன.

Leave a Response