ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் பாஜக நிலை என்ன என்பது குறித்து அக்கட்சி மாநில தலைவர் தமிழிசை தெரிவித்தார்.
இதுகுறித்து தொலைக்காட்சி சேனல்களிடம் பேசிய தமிழிசை கூறுகையில்:-
ஆர்.கே.நகரில் முன்பு நாங்கள் தனித்து போட்டியிட்டோம். இப்போதைய தேர்தலில் எப்படி போட்டியிடுவது என்பது குறித்து பாஜக மாநில தலைவர் தலைமையிலான மாநில தேர்தல் குழு கூடி முடிவை எடுக்கும். அந்த முடிவை மத்திய தேர்தல் குழுவிற்கு அனுப்புவோம். அந்த குழுவே இறுதி முடிவை அறிவிக்கும் என்றார்.
இப்போதைக்கு யூகத்தின் அடிப்படையில் எதையும் தெரிவிக்க முடியாது என்று தமிழிசை திட்டவட்டமாக கூறிவிட்டார்.