இந்தியாவில் கொரோனா பாதிப்பு எவ்வளவு ? எண்ணிக்கை விவரங்கள்..!

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில் மூன்றாவது கட்ட ஊரடங்கும் முடிவடைந்து நான்காவது கட்ட ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பாதிப்பு எண்ணிக்கை ஒன்றரை லட்சத்தை தாண்டி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 1,51,767- ஆக புதன்கிழமை அதிகரித்தது. பலியானவா்கள் எண்ணிக்கை 4,337-ஆக உயா்ந்தது. புதன்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மட்டும் 170 பேர் உயிரிழந்தனா். 6,387 பேருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.இதுவரை 64,426 போ கரோனாவில் இருந்து விடுபட்டுள்ளனா். 83,004 போ சிகிச்சையில் உள்ளனா்.

கொரோனா தொற்று பாதித்த மாநிலங்களில் மகாராஷ்டிரம் அதிகயளவில் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு இதுவரை 54,758 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 17,728 பேரும், குஜராத்தில் 14,821 பேரும், தேசிய தலைநகர் தில்லியில் 14,465 பேரும் பாதிக்கப்ட்பட்டுள்ளனர்.

Leave a Response