போயஸ் கார்டனில் சோதனை நடக்க தினகரனும் சசிகலாவும் தான் காரணம் – கேபி முனுசாமி

201707171103254612_Kamal-Haasan-should-not-be-criticized-OPannerselvam-team_SECVPF

 

போயஸ்கார்டனில் சோதனை நடக்க தினகரனும் சசிகலாவும் தான் காரணம் என முன்னாள் அமைச்சர் கேபி முனுசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ்கார்டன் வேதா இல்லத்தில் நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். ஜெயலலிதா வாழ்ந்த வீட்டில் நடந்த இந்த ரெய்டு அதிமுக தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் கோவை பெரியநாயக்கன் பாளையத்தில் முன்னாள் அமைச்சர் கேபி முனுசாமி இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது போயஸ் கார்டனில் நடந்த ரெய்டு ஒவ்வொரு அதிமுக தொண்டரும் வருத்தமடைந்துள்ளதாக அவர் கூறினார். மேலும் இந்த ரெய்டுக்கு சசிகலாவும் தினகரனும் தான் காரணம் என்றும் அவர் கூறினார். இந்த சோதனையிலும் சசிகலா குடும்பத்தினர் அரசியல் ஆதாயம் தேட முயற்சிப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

Leave a Response