விரைவில் பொதுமக்களை சந்திக்க கவர்னர் திட்டம்- கிரண்பேடி பாணியில்!

governor1._L_styvpf

மத்திய அரசு உத்தரவுப்படி, தமிழகத்தில் முழுவேகத்தில் ஆட்சி நிர்வாகத்தைக் கொண்டு செல்ல முயற்சிக்கும் கவர்னர் பன்வாரிலால் புரோகித், விரைவில் பொதுமக்களையும் சந்திக்கவிருக்கிறார். இதற்காகவே அவர், தமிழ் மொழியை வேகமாக கற்று வருகிறார். ராஜ்பவனில் இருக்கும் சாதாரண பணியாட்களை அழைத்து வைத்து, அவர்களிடம் தமிழ் பேச முயற்சித்து வருவதாகக் கூறப்படுகிறது.இப்படி சாதாரண தொழிலாளிகளிடம் பேசிப் பழக முயற்சிக்கும் கவர்னர், அவர்கள் மூலம், தமிழக ஆட்சி நிர்வாகத்தில் என்ன நடக்கிறது. தமிழக, அரசு, மத்திய அரசு குறித்தெல்லாம் மக்கள் என்ன நினைக்கின்றனர் என்பது குறித்தெல்லாம், விவரமாக கேட்டு அறிய முயல்கிறார். சுற்றுப்பயணம் தமிழ் பேசும் அளவிற்கு வந்ததும், அவர், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மக்களை நேரடியாக சந்திக்கும் திட்டம் வைத்திருப்பதாகவும் தெரிகிறது. புதுச்சேரியில், அம்மாநில கவர்னர் கிரண்பேடி எப்படியெல்லாம் மக்களோடு மக்களாக கலந்து பழகுகிறாரோ, அதே பாணியில் தமிழக கவர்னரும் செயல்பட விரும்புகிறார் என, கவர்னர் அலுவலக ஊழியர்கள் கூறுகின்றனர்.

Leave a Response