அரியானாவில் டிரைவர் இல்லாமல் 2 கிமீ வரை ஓடி தடம் புரண்ட ரெயில் எஞ்சின்!

train-derail
அரியானா மாநிலத்தில் அக்பர் என்னும் 65 ஆண்டுகள் பழமைவாய்ந்த நீராவி ரெயில் எஞ்சின் ஒன்று உள்ளது. நேற்று அந்த ரெயில் எஞ்சினை பராமரித்து சோதனை செய்யும் பணி நடைபெற்றது.

அப்போது அந்த ரெயில் எஞ்சினின் பிரேக் லிவர் ஓடிக்கொண்டிருக்கும் போது திடீரென்று பழுதடைந்தது. தொடர்ந்து அந்த எஞ்சினில் இருந்த இரண்டு ஓட்டுநர்களும் உயிர் தப்புவதற்காக கீழே குதித்தனர்.

ஓட்டுநர்கள் இல்லாமல் சென்ற அந்த ரெயில் எஞ்சின் தொடர்ந்து 2 கி.மீ தூரம் சென்ற பின்னர் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.

Leave a Response