‘கலை இயக்குநர்’ அமரன் இப்போது தயாரிப்பு வடிவமைப்பாளர்!

amaran

தமிழ் மற்றும் மலையாளம் மொழிகளில் உருவாகி இருக்கும் இந்த ‘சோலோ’ திரைப்படம், இந்த மாத இறுதியில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் மூலம் தயாரிப்பு வடிவமைப்பாளராக உருவெடுத்து இருக்கிறார் கலை இயக்குநரான அமரன்.

இவர், ‘லிங்கா’, ‘காற்று வெளியிடை’ படங்களில் கலை இயக்குநராக பணியாற்றியவர்.இயக்குநர் மணிரத்னத்தின் ‘காற்று வெளியிடை’ திரைப்படத்தில் ஒன்றாக இணைந்து பணியாற்றிய பிஜாய் மற்றும் அமரன் கூட்டணி, தற்போது ‘சோலோ’ திரைப்படத்தில் மீண்டும் இணைந்திருப்பது மேலும் சிறப்பு.

விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘துப்பறிவாளன்’ திரைப்படத்தின் ஒரு மிக முக்கியமான சிறப்பம்சம் கலை இயக்கம். அந்த சிறப்புக்கு சொந்தக்காரரும் அமரன் தான்!

மகிழ் இயக்கத்தில் உருவாக இருக்கும் ‘தடம்’, நயன்தாரா நடிக்கும் ‘கோ கோ’ மற்றும் ‘மாரி 2’ ஆகிய படங்களில் தற்போது அமரன் தயாரிப்பு வடிவமைப்பாளராக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Response