சமீபத்தில் வெளிவந்த ஒரு திரைப்படத்தையும் விடாமல் கலாய்த்த “தமிழ் படம் 2.0” டீசர்..!

மிர்ச்சி சிவா-வின் நடிப்பில் வெளிவந்து சக்கை போடு போட்ட திரைப்படம் ‘தமிழ் படம்’. காமெடியில் கலக்கி இருந்த இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகமும் தற்பொழுது வெளியாக இருக்கிறது.

இப்படத்தின் டீசரானது நேற்று வெளியாகி இருந்த நிலையில், சமீபத்தில் வெளிவந்த ஒரு திரைப்படத்தையும் விடாமல் கலாய்திருப்பதை அதில் காண முடிகிறது.

சினிமா மட்டுமல்லாது தமிழக அரசியல் வாதிகளையும் விட்டுவைக்காது கிண்டலடித்து இருக்கிறது தமிழ்படம் 2.0. இப்படத்தின் முதல் பார்வை போஸ்டரிலேயே தமிழக துணை முதல்வர் பன்னீர் செல்வம் அவர்களைப் போன்ற கெட்டப்பில் தோன்றி இருந்தார் சிவா.

 

இப்படி இருக்கையில், தற்பொழுது வெளியாகி இருக்கும் டீசரில், ஜெயலலிதா அவர்கள் சிறை சென்ற போது, அதிமுகவினர் அழுது கொண்டே பதவி ஏற்றத்தையும் கலாய்திருக்கும் காட்சியும் இடம்பெற்றுள்ளது.

மேலும் மங்காத்தா, துப்பாக்கி, மெர்சல், பாகுபலி, விக்ரம் வேதா, துப்பறிவாளன் என சமீபத்தில் வெளிவந்த அனைத்து படங்களை கிண்டல் செய்யும் காட்சிகளும் அதில் இடம் பெற்றிருக்கிறது.

இப்படி டீசரிலியே இத்தனை படங்களை இடம்பெற்றிருப்பதால், இப்படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்து இருப்பதாகவே தெரிகிறது. இந்த மெகா காலாய் திரைப்படம் வருகிற ஜூலை மாதத்தில் வெளியாக இருப்பதாகவும், படக்குழு தற்பொழுது அறிவித்துள்ளது.

 

Leave a Response