அருப்புக்கோட்டையில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட வாலிபர் காவல் நிலையத்தில் தற்கொலை!

suicide-600-jpg
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே உள்ள சுக்கிலநத்தம் பகுதியை சேர்ந்தவர் மலையரசன் மகன் மலைச்சாமி (23). குடிப்பழக்கம் உள்ள இவர் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. நேற்று மதியம் மது அருந்திய மலையரசன் அவரது பாட்டியிடம் தகராறு செய்துள்ளார். உடனே அவரது உறவினர் பூமிநாதன் அருப்புக்கோட்டை தாலுகா போலீஸாருக்கு புகார் செய்தார். இதன்பேரில் எஸ்.ஐ கவுதம்விஜய், மலைச்சாமியை விசாரணைக்காக காவல்நிலையம் அழைத்து வந்தார்.

காவலர் ஓய்வறையில் அமர்ந்திருந்த மலைச்சாமி, திடீரென அங்கிருந்த ஜன்னல் திரைத்துணியை எடுத்து ஜன்னலில் தூக்கிட்டு தொங்கினார். உடனே அவரை மீட்டு, தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், மலைச்சாமி இறந்ததாக தெரிவித்தனர். இதுகுறித்து எஸ்.பி. ராஜராஜன் அருப்புக்கோட்டை தாலுகா காவல்நிலையத்தில் விசாரணை நடத்தினார்.

பின்னர் அவர் கூறுகையில்:- ‘‘மலைச்சாமியை விசாரணைக்காக அழைத்து வந்ததாகவும், பின்னர் அவரை ஸ்டேஷன் பெயிலில் விடுவதற்காக ஆவணங்களை தயார் செய்துகொண்டிருந்த போது, அவர் திடிரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் எனவும், இந்த தற்கொலைக்கு என்ன காரணம் என்றும் சம்மந்தப்பட்ட எஸ்ஐ மற்றும் போலீஸார் மீது குற்றவியல் நீதிபதி விசாரணைக்கு பின் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று தெரிவித்துள்ளார்.

Leave a Response