ராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டம் வாபஸ் பெற்றனர்!

miinavarkal

மீன்வளத்துறை சார்பில் மீனவர்களுக்கு ஆண்டுதோறும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் புயல் மற்றும் மழை கால சேமிப்பு நிவாரண நிதியாக ரூ.4 ஆயிரத்து 500 வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் 400 பேருக்கு புயல் கால சேமிப்பு நிவாரண நிதி வழங்கவில்லை. அதேசமயம், மீனவர்கள் அல்லாதவர்களுக்கு மீன்வளத் துறையினர் நிவாரண நிதி வழங்கியதாக கூறப்படுகிறது.

menavaikalஇதனை கண்டித்தும், 400 மீனவர்களுக்கு உடன் புயல் கால சேமிப்பு நிவாரண தொகை வழங்க வலியுறுத்தியும், இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள், அவர்களது படகுகளை விடுவிக்க வலியுறுத்தியும் ராமேஸ்வரம் மீனவர்கள் கடந்த 8ம் தேதி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். வேலைநிறுத்தம் செய்த மீனவர்களிடம் அமைச்சர் மணிகண்டன் நேற்று முன்தினம் மாலை சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். விரைவில் புயல் கால சேமிப்பு நிவாரண நிதி வழங்க நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்ததால் மீனவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். இதையடுத்து ஐந்து நாட்களுக்கு பின்னர் நேற்று காலையில் 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.

Leave a Response