நெல்லையில் நடந்த எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் துணை முதல்வர் பன்னீர்செல்வம் பேசியதாவது, மக்கள் மனதில் மன்னராக குடியிருந்தவர் எம்ஜிஆர். மற்றவர்கள் துன்பம் கண்டு பொறுக்காவதவர் அவர்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவை 37 இடங்களில் வாக்காளர்கள் வெற்றி பெற செய்தனர். நாடாளுமன்றத்தில் நாம் மூன்றாவது பெரிய கட்சியாக உயர்ந்தோம். எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் அதிமுகவின் கோட்டையில் ஒரு செங்கலை கூட எடுத்து போட முடியாது.
ஓன்றரை கோடி தொண்டர்களை கொண்டது அதிமுக. நமது தொண்டர்கள் வேறு கட்சிக்க செல்ல மாட்டார்கள். அதிமுக ஒரு நாளும் சோடை போகாது. எம்ஜிஆர் தொடங்கிய அதிமுக மக்கள் இயக்கமாக மாற நெல்லை சீமையை துணை நின்றது.
எம்ஜிஆர் ரசிகர்கள் முதல் முறையாக அவருக்கு தாமரைக் கொடியை ஏற்றி கட்சிக்கு அடித்தளம் அமைத்தது இங்குதான். இன்னும் எத்தனை தேர்தல் வந்தாலும் அதி்முக வெற்றி பெறும். ஜெயலலிதா வகுத்த பாதையில் தமிழகத்தில் நல்லாட்சி தொடரும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.