உள்நாட்டுபொருள் உதிரிபாகங்களை கொண்டு புதிய அணு உலைகள்..!

Tamil-Daily-News-Paper_5591547490

 

கூடங்குளத்தில் 50% உள்நாட்டுபொருள் உதிரிபாகங்களை பயன்படுத்தி அமைக்கப்படும் புதிய அணு உலைகள்..!

கூடங்குளம் அணு மின் நிலையத்தில் முதல் இரண்டு அணு உலைகளில் 2013ம் ஆண்டுமுதல் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கூடங்குளம் அணு மின் நிலைய 5 மற்றும் 6வது அணு உலைகளின் கட்டுமானத்திற்கு 50 சதவிகிதத்திற்கும் மேலான உதிரிபாகங்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டதாக இருக்கும் என்று ரஷ்ய துணை தூதர் ஆன்ட்ரேய சில்ட்சோவ் கூறியுள்ளார். தற்போது கூடங்குளம் அணு மின் நிலையத்தில் 3 மற்றும் 4வது அணு உலைகளுக்கான கட்டுமானப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் முடிவடைந்த உடன் 5 மற்றும் 6வது அணு உலைகளின் கட்டுமானப்பணிகள் தொடங்க உள்ளன.

இது தொடர்பாக மும்பையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஆன்ட்ரேய சில்ட்சோவ், ஏற்கனவே நடைபெற்று வரும் 3 மற்றும் 4 ஆவது அணுஉலைகள் அமைக்கும் பணிக்கு 20 சதவீதம் உள்நாட்டு உதிரிபாகங்கள் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், 5 மற்றும் 6 ஆவது அணு உலைகள் அமைக்கும் பணியின் போது 50 சதவீதமாக அதிகரிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் 5 மற்றும் 6 ஆவது அணு உலைகள் 50 கோடி ரூபாயில் அமைக்கப்பட உள்ளன என்று அவர் கூறியுள்ளார். புதிய அணு உலைகள் அமைக்கும் பணிக்கான செலவில் பாதி நிதியை ரஷ்யா அளிக்கிறது என்றும் ஆன்ட்ரேய சில்ட்சோவ் கூறியுள்ளார். மேலும் ஜெனரேஷன் 3 பிளஸ் எனும் புதிய வகை அணு உலைகளை இந்தியாவுக்கு ரஷ்யா வழங்கவுள்ளது என்றும் இந்தியாவின் வளர்ச்சி பாதையில் ரஷ்யாவின் பங்களிப்பும் இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

 

Leave a Response