திறக்கப்படுகிறது மூவாயிரத்திற்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள்!

Tas_1_03218

 

நெடுஞ்சாலைகளை ஊரக சாலைகளாக்கி டாஸ்மாக் கடைகளை திறக்கும் தமிழக அரசின் விளக்கத்தை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.
தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை ஒட்டிய 500 கி.மீ தூரத்துக்கு உள்ள டாஸ்மாக் கடைகளை மார்ச் 31-ம் தேதிக்குள் அகற்றவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதையடுத்து தமிழகத்தில் இருந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இந்நிலையில், தமிழக அரசு மூடப்பட்ட கடைகளைத் திறக்கும் பணியில் ஈடுபட்டது. இதற்கு மக்களிடையே எதிர்ப்பு நிலவியது. அதனால், தேசிய நெடுஞ்சாலைகள் எனும் பெயரை ஊரக சாலைகள் என்று பெயர் மாற்றம் செய்து டாஸ்மாக் கடைகளைத் திறக்க தமிழக அரசு முடிவு செய்தது.

Tamil_News_large_1895950

இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், தேசிய நெடுஞ்சாலைகளை ஊரகச் சாலைகள் என்று பெயர் மாற்றம் செய்யும் தமிழக அரசின் விளக்கத்தை ஏற்றுக்கொண்டனர். மேலும், டாஸ்மாக் கடைகளைத் திறப்பதற்கும் அனுமதி அளித்தனர். இதுதொடர்பான எழுத்துபூர்வமான உத்தரவு பின்னர் வழங்கப்படும் என்று தெரிவித்தனர்.

Leave a Response