கர்நாடகா:நம்பிக்கை வாக்கெடுப்பை முன்னிட்டு சட்டசபை பகுதியில் 144 தடை உத்தரவு..!

கர்நாடகாவின் விதான் சவுதா பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எடியூரப்பா பதவி ஏற்புக்கு எதிரான வழக்கில் பெரும்பான்மையை நிரூபிக்க நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. இன்று மாலை 4 மணிக்கு கர்நாடக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது.

முன்னதாக எம்எல்ஏக்கள் அனைவரும் பதவியேற்க வேண்டும் என்பதால் இன்று காலை 11 மணிக்கு கர்நாடக சட்டசபை கூடுகிறது. இதற்காக ஹைதராபாத்தில் அடைத்து வைக்கப்பட்ட காங்கிரஸ் மற்றும் மஜத எம்எல்ஏக்கள் இன்று காலை பெங்களூரு வந்தடைந்தனர்.

நம்பிக்கை வாக்கெடுப்புக்கு போதுமான பாதுகாப்பு தரவேண்டும் என உச்சநீதிமன்றம் கர்நாடக மாநில டிஜிபிக்கு உத்தரவிட்டது. இதனை முன்னிட்டு கர்நாடக சட்டசபை அமைந்துள்ள விதான் சவுதா பகுதியில் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் விதான் சவுதா பகுதியில் ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Leave a Response