வசனத்தை பேசிகொண்டே பஸ் ஓட்டிய பிரபல நடிகை !

Ippadai-Vellum-Nichayame-Song-Image-800x450
தூங்கா நகரம், அரிமா நம்பி படங்களை இயக்கிய கவுரவ் நாராயணன் இயக்கும் உதயநிதியின் “இப்படை வெல்லும்”. இப்படத்தில் மஞ்சிமா மோகன், ராதிகா சரத்குமார், சூரி, டேனியல் பாலாஜி, ஆர்.கே.சுரேஷ் நடிக்கின்றனர். D இமான் இசை அமைத்துள்ளார்.

இந்தப் படத்தில் கதைக்குஏற்றார் போல் ராதிகா உதயநிதியின் தாயாகவும் பஸ் டிரைவராகவும் நடித்துள்ளார்.

இதுகுறித்து இப்படத்தின் இயக்குனர் கூறியதாவது:-

பெண்கள் எல்லாத்துறையிலும் ஆண்களுக்க நிகராக இருக்கிறார்கள். பஸ்கூட ஓட்டுகிறார்கள். படத்தில் உதயநிதியின் தாய் ஒரு துணிச்சலான பெண். பஸ் டிரைவர். அம்மா கேரக்டருக்கும் பொருத்தமாக இருக்க வேண்டும், துணிச்சலான பெண்ணாகவும் இருக்க வேண்டும் என்று யோசித்தபோது ராதிகா மேடம் நினைவுக்கு வந்தார். அவரிடம் சொன்னபோது “நான்கு காட்சிகள் தான் எனக்கு இருக்கு அதுக்குபோய் நான் இவ்ளோ ரிஸ்க் எடுக்கணுமா?” என்று மறுத்தார். நான் கதையின் தன்மையை எடுத்துக் கூறி அவரைத் தவிர யாராலும் இதில் நடிக்க முடியாது என்று எடுத்துச் சொன்ன பிறகு நடிக்க சம்மதித்தார். மூன்று நாட்கள் பஸ் ஓட்ட பயிற்சி எடுத்தார். அதன் பிறகு நடித்தார். திருவண்ணாமலை பஸ் நிலையத்திலிருந்து பஸ்சை எடுத்துக் கொண்டு ஊருக்குள் சந்து பொந்தெல்லாம் ஓட்டி பைபாசில் வந்து முடிய வேண்டும்.

கிட்டதட்ட 5 நிமிடம் ஒரே ஷாட்டில் இந்த காட்சி இடம்பெறும். வசனம் பேசிக்கொண்டே பஸ்சை ஓட்டினார். இதுபோல் இன்னொரு நடிகையால் நடிக்க முடியாது என்று என்னால் உறுதியாக சொல்ல முடியும். என்றார் கவுரவ்.
rathika
இதுகுறித்து ராதிகா கூறியதாவது:- உங்களால்தான் முடியும் என்று ஒரு இயக்குனர் வந்து நிற்கும்போது எப்படி மறுக்க முடியும்.

வீட்டில் எல்லோரும் தடுத்தார்கள். அவர்களை மீறி பஸ் ஓட்ட பயிற்சி எடுத்து ஓட்டினேன். இப்போது எனக்கு கூடுதலாக ஒரு தொழில் தெரியும். நிஜ வாழ்க்கையில் இது எனக்கு எந்த அளவிற்கு பயன்படும் என்று தெரியவில்லை என்றார்.

Leave a Response