ஜனநாயகத்தில் விவசாயிகள் தான் எஜமானார்கள், நான் பொறுக்கி தான்!- கமல் காரசார பேச்சு!

04-1509780986-kamal5467

தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம், சென்னை கிரீன்வேல்ஸ் சாலையில் உள்ள முத்தமிழ் அரங்கத்தில் நடந்தது. இதில், நடிகர் கமல்ஹாசன் கலந்து கொண்டார்.

அப்போது பேசிய கமல்ஹாசன்…

நான், உழவன் மகன் இல்லை என்றாலும், உழவனின் மருமகன். சினிமா இல்லாமல் கூட இருந்துவிடலாம், ஆனால் உணவு, குடிநீர் இல்லாமல் இருக்க முடியாது. ஜனநாயகத்தில் விவசாயிகள் தான் எஜமானார்கள். இங்கு ஓட்டு சேகரிக்க வரவில்லை, சோறு சேகரிக்க வந்துள்ளேன். விவசாயத்தை தொழிலாக்கினால் தான் நாம் வாழ முடியும். அரசியல்வாதிகள் தனியாக இருக்கிறார்கள் என நினைத்துவிடாதீர்கள், எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் தான் என்பதை மறந்துவிட்டோம். தமிழகமும், மராட்டியமும் தான் அதிக வரி கட்டும் மாநிலங்கள். மற்ற மாநிலங்களில் விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் அது நடக்கவில்லை. ஒரு ஆற்றையே காணாமல் செய்துவிட்டனர். இன்னும் சில தினங்களில் அதுப்பற்றிய தகவல் வரும்.

c0219cfa7561ab7e41c67ce1d56b213e
முன்னேற்றம் என்ற போர்வையில் விவசாயத்தை அழித்து விடாதீர்கள்.டில்லியில் ஒருவர் என்னை பொறுக்கி என்றார். ஆமாம், நான் பொறுக்கி தான், அறிவு மொழி சார்ந்த ஞானத்தை நான் எங்கு வேண்டுமானாலும் பொறுக்குவேன்.கடந்த ஐம்பது ஆண்டுகளாக நாம் தூங்கி விட்டோம், இனியாவது விழித்துக் கொள்வோம். குளங்கள், ஏரிகளை பராமரிப்பு செய்ய நிச்சயமும் நாங்கள் உதவுவோம். புராணங்களில் பாலம் கட்டுவதற்கு அணில் உதவியதைப்போல, உங்களுக்கு ஒரு ஜந்துவாக நானும் உதவ வந்துள்ளேன்.

விவசாயிகளுக்கு ஊக்கியாகவும், அலாரமாகவும் இருப்பேன். நான் கடவுள் நம்பிக்கை இல்லாதவன் தான். ஆனால் நீங்கள் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள். உங்களின் கடவுள் நம்பிக்கை பட்டியலில் இப்போது மழையையும், ஆறுகளையும் இணைத்து கொள்ளுங்கள்.

மழையையும், ஆறுகளையும் கும்பிட தொடங்குங்கள்.இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.

Leave a Response