சிவகார்த்திகேயன் நயன்தாரா நடிப்பில் நாளை திரைக்கு வரும் “மிஸ்டர் லோக்கல்”..!

‘வேலைக்காரன்’ படத்துக்குப் பிறகு சிவகார்த்திகேயன், நயன்தாரா ஜோடி சேர்ந்து நடிக்கும் படம், ‘மிஸ்டர். லோக்கல்’. யோகி பாபு, ராதிகா, ரோபோ சங்கர், மொட்டை ராஜேந்திரன், ஆர்.ஜே.பாலாஜி, சதீஷ் உட்பட பலர் நடிக்கின்றனர்.

எம்.ராஜேஷ் இயக்கும் இந்தப் படத்தை, ஸ்டூடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரிக்கிறார். ஹிப்ஹாப் தமிழா இசையமைக்கிறார். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார்.  இந்தப் படத்தை பார்த்த தணிக்கை குழு, அனைவரும் பார்க்கலாம் என்று ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளது.

சாதாரண இளைஞனான மனோகருக்கும் (சிவகார்த்திகேயன்), வசதி படைத்த கீர்த்தனாவுக்கும் (நயன்தாரா) நடக்கும் மோதல்தான் கதை.

‘நான் இயக்கிய ‘சிவா மனசுல சக்தி’ படத்தை மாஸாக உருவாகினால் எப்படியிருக்குமோ, அதுதான், ‘மிஸ்டர். லோக்கல்’. அந்தப் படத்தின் 2.0 என்றும் இந்தப் படத்தை சொல்லலாம்” எனத் தெரிவித்திருந்தார் இயக்குனர் ராஜேஷ். வரும் 17 ஆம் தேதி இப்படம் திரைக்கு வருகிறது.

Leave a Response