கல்லூரி மாணவி மீதான குண்டர் சட்டம் ரத்து- உயர்நீதிமன்றம் அதிரடி!

High-Court

புதுக்கோட்டை மாவட்டம் கதிராமங்கலத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து அந்தப் பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நூறு நாள்களுக்கு மேலாக நடந்து வரும் இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து மாணவி வளர்மதி துண்டு பிரசுரம் விநியோகம் செய்தார்.

இதைத் தொடர்ந்து மாணவர்களைப் போராடத்தூண்டும் வகையில் துண்டுபிரசுரம் விநியோகித்ததாக மாணவி வளர்மதியைக் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதனிடையே, மாணவி வளர்மதியைக் குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்ய சேலம் மாநகர காவல்துறை ஆணையர் சஞ்சய் குமார் உத்தரவிட்டார்.

Valarmathi

இதை எதிர்த்து வளர்மதியின் தந்தை மாதையன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அதில், எனது மகள் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த மனு மீது விசாரணை இன்று நீதிபதிகள் ஏ.செல்வம், பி.கலையரசன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது, இரு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதிகள் மாணவி வளர்மதி மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

Leave a Response