வளர்மதி வழக்கு! தமிழக அரசுக்கு இரண்டு வாரம் அவகாசம்!

Valarmathi

நெடுவாசல், கதிராமங்கலம் கிராமங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக போராடியதைத் தொடர்ந்து மாணவி வளர்மதி குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். காவல்துறை அனுமதி பெற்று போராட்டம் நடத்திய வளர்மதியை, குண்டர் சட்டத்தில் அடைத்த உத்தரவை ரத்து செய்யக்கோரி அவரது தந்தை மாதையன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை ஆகஸ்ட் 3ஆம் தேதி விசாரித்த உயர்நீதிமன்றம் உள்துறை செயலாளர், சென்னை காவல் ஆணையர் ஆகியோர் இன்று பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் ஏ.செல்வம், பொன்.கலையரசன் ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பதில் மனு தாக்கல் செய்ய மேலும் கால அவகாசம் அளிக்க அரசு வழக்கறிஞர் கோரிக்கை வைத்தார். இதனை ஏற்ற நீதிபதிகள், தமிழக அரசுக்கு மேலும் இரண்டு வார கால அவகாசம் வழங்கி வழக்கை ஆகஸ்ட் 21 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Leave a Response