வளர்மதி மீது குண்டர் சட்டம் ஏன்? சேலம் போலீஸ் கமிஷனரிடம் ஹைகோர்ட் கேள்வி!

valarmathi
சேலம் மாணவி வளர்மதி மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரிய அவரது தந்தை மனு தாக்கல் செய்து இருந்தார். காவல்துறையின் அனுமதி பெற்ற பின்னர் நடந்த போராட்டத்தில்தான் வளர்மதி கலந்து கொண்டார். எனவே, அவரது குண்டர் சட்ட தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்து இருந்தார்.

நெடுவாசல், கதிராமங்கலத்தில் நடந்த போராட்டங்களுக்கு ஆதரவாக சேலம் மாணவி வளர்மதி கடந்த மாதம் 12ம் தேதி துண்டு பிரசுரம் வழங்கியதால் அவர் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இது பல்வேறு தரப்பிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி, கண்டனக் குரல்களையும் எழுப்பி இருந்தது. இந்த தண்டனையை எதிர்த்து அவரது தந்தை மாதையன் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில் கூறியுள்ளதாவது:-

”வளர்மதி மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் அவரை ஜாமினில் விடுவிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, நீதிபதிகள் செல்வம், பொன். கலையரசன் அடங்கிய அமர்வு, விசாரணையை இன்று ஒத்திவைத்திருந்தது. இன்றைய விசாரணையின் போது விளக்கம் கேட்டு சேலம் காவல்துறை ஆணையருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த வழக்கு வரும் 14ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Leave a Response