மருந்து, மாத்திரைகள் மீது ‘எம்.ஆர்.பி.’ விலை அச்சிடுவது கட்டாயம்! 2018 ஜனவரியில் நடைமுறைக்கு வருகிறது.

tools
”மருத்துவ உபகரணங்களில், 2018 ஜன., 1 முதல், எம்.ஆர்.பி., எனப்படும், அதிகபட்ச சில்லரை விற்பனை விலை அச்சிடப்படும்,” என, மத்திய ரசாயன மற்றும் வேளாண்மை துறை இணையமைச்சர், மன்சுக் எல்.மந்தவியா தெரிவித்து உள்ளார்.

இது குறித்து, அவர் மேலும் கூறியதாவது:-

இனி விற்பனை செய்யப்படும் மருத்துவ உபகரண பொருட்களின் அட்டையில், நிகர எடை, தயாரிப்பு மற்றும் காலாவதி தேதி, தயாரிக்கப்பட்ட நாடு, நுகர்வோர் உதவி மைய வசதி உள்ளிட்ட விபரங்களை அச்சிட வேண்டும் என, மத்திய நுகர்வோர் விவகாரங்கள் அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது.

அத்துடன், அனைத்து விபரங்களும், நுகர்வோர் எளிதில் பார்க்கும் வகையில், பெரிய எழுத்துக்களில் அச்சிட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த புதிய விதிகள், மருத்துவ உபகரணங்களுக்கும் பொருந்தும் என, தற்போது தெளிவுபடுத்தப்படுகிறது.

இதன்படி, 2018 ஜன., 1 முதல், இதய வால்வுகள், ஸ்டென்ட்ஸ் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களின் அட்டையில், அதிகபட்ச சில்லரை விற்பனை விலை அச்சிடப்படும். இது, அனைத்து, ‘இ – காமர்ஸ்’ நிறுவனங்களுக்கும் பொருந்தும் என தெரிவித்துள்ளார்.

Leave a Response