நண்பரின் கல்லீரல் தானம்.. பிழைத்துக் கொண்ட பூஜா!

kudumpam

டெல்லி அருகே உள்ள குர்கான் நகரத்தைச் சேர்ந்தவர் பூஜா பட்னாகர் (44). இவருக்கு கல்லீரல் பாதிப்பு நோய் ஏற்பட்டது. இதனால் கடந்த 17 ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், கல்லீரலை மாற்ற வேண்டும் எனக்கூறினர். இதையடுத்து, கல்லீரல் உறுப்பு தானம் தொடர்பாக விசாரித்து வந்தனர்.

பூஜா பட்னாகர் தனக்கு கல்லீரல் தேவைப்படுவதாக முகநூலில் பதிவிட்டிருந்தார். அவரது வேண்டுகோளுக்கு பலர் நிதியுதவி வழங்க முன்வந்தனர். ஆனால் யாரும் கல்லீரல் தானம் தர முன்வரவில்லை.

liver

இந்நிலையில், சென்னையை சேர்ந்த கோபிநாத் பிரசன்னா என்பவர், பூஜாவுக்கு கல்லீரல் தானம் தர முடிவு செய்தார். இவர் ஏற்கனவே பூஜா குடும்பத்துக்கு அறிமுகமானவர்.

இதையடுத்து, கோபிநாத் சென்னையில் இருந்து டெல்லி சென்றார். அங்கு மேக்ஸ் மருத்துவமனையில் கடந்த 21ம் தேதி கல்லீரல் மாற்று சிகிச்சை நடைபெற்றது.

இதுதொடர்பாக டாக்டர்கள் கூறுகையில்,

‘அறுவை சிகிச்சை செய்து கொள்பவரின் உறவினரிடம் இருந்துதான் கல்லீரல் பெறவேண்டும் என உறுப்பு மாற்று ஆணையம் தெரிவிக்கிறது. ஆனால், பூஜாவுக்கு மிகவும் நெருக்கமானவர் என்பதால், கோபிநாத்திடம் இருந்து கல்லீரல் தானம் பெற சம்மதம் பெறப்பட்டது.

கோபிநாத் பிரசன்னா கூறுகையில்,

’நான் இங்கிலாந்தின் வேல்ஸ் நகரில் படித்தபோது எனக்கு பூஜா பட்னாகர் குடும்பத்தினர் அறிமுகம் ஆனார்கள். அதன்பின் அவர்கள் இந்தியாவின் குர்கான் நகருக்கு வந்துவிட்டனர். ஆனாலும் அவர்களுடன் தொடர்பில் இருந்து வந்தேன். பூஜா மேடமை எனக்கு நன்கு தெரியும். அவர்களுக்கு ஒரு கஷ்டம் என்றால் நான் கண்டிப்பாக உதவி செய்வேன்’ என தெரிவித்தார்.

அறுவை சிகிச்சையில் பங்கேற்ற நர்சு ஒருவர் கூறுகையில்,

’இந்த காலத்தில் உறவினர்களே உறுப்பு தானம் செய்ய தயங்குவதை பார்த்து வருகிறோம். அப்படிப்பட்ட நிலையில், நீண்ட நாட்களாக பழகி வந்த ஒருவரது நட்பை மதிக்கும் விதமாக கோபிநாத் கல்லீரல் தானம் செய்ததை கண்டு ஆச்சரியத்தில் திளைத்து விட்டேன்’ என்றார்.

கோபிநாத்துக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Leave a Response