குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பரப்புரை மேற்கொள்வதற்கான அவகாசம் முடிந்தபிறகு தொலைக்காட்சிகளுக்கு பேட்டியளித்ததன் மூலம் நடத்தை விதிமுறைகளை மீறியதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக, பாஜக தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவித்தது. இது தொடர்பாக விளக்கமளிக்கும்படி தேர்தல் ஆணையம் கடந்த 13ஆம் தேதி நோட்டீஸ் அளித்திருந்தது. இந்நிலையில், தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் டிஜிட்டல் மற்றும் மின்னணு ஊடகங்கள் பலமடங்கு வளர்ச்சியடைந்த சூழலில் தேர்தல் நடத்தை விதிமுறைகளில் 126வது விதியை மறு ஆய்வு செய்யவேண்டி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுவில் தேர்தல் ஆணையம், தகவல் ஒலிபரப்புத்துறை, தகவல் தொழில்நுட்பத்துறை மற்றும் இந்திய பிரஸ் கவுன்சில் ஆகியவற்றின் பிரதிந்திகள் இடம்பெறுவார்கள் என அறிவிக்கபப்ட்டுள்ளது. ராகுல் காந்திக்கு பிறப்பிக்கப்பட்ட நோட்டீஸ் திரும்பப் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் ரந்தீப் சுர்ஜிவாலா, ராகுல் காந்தியின் பேட்டியை தொலைக்காட்சிகள் ஒளிபரப்புவதை தடுப்பதற்காகத்தான் முதலில் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டதா என கேள்வி எழுப்பியுள்ளார். பிரதமர் மற்றும் மற்ற அமைச்சர்கள் மீது இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்படவேயில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.