புற்றுநோயயை குணமாக்கும் சோயா பீன்ஸ் !

vagem-edamame
உலகில் மிக கொடிய நோயான புற்று நோய்களைக் கட்டுப்படுத்துவதற்கு இதுவரையில் சிறந்த மருந்து கண்டுபிடிக்கவில்லை. ஆனாலும் வரையறுக்கப்பட்ட நடத்தைகள் மூலமும், இயற்கை மூலிகைகளின் உதவியுடனும் இந்நோயை ஓரளவு கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க முடியும்.

ஆனால், தற்போது சோயா பீன்ஸில் இருந்து உருவாக்கப்படும் இயற்கை மருந்தானது பொதுவான புற்று நோய்களுக்கு (மார்புப் புற்றுநோய், குடல், சிறுநீர்ப்பை, ஈரல், நுரையீரல், லிம்போமா மற்றும் வாய் புற்றுநோய் போன்றனவற்றிற்கு) நிவாரணமளிக்கவல்லது என்று மிசூரி பல்கலைக் கழகத்தின் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் வெளியிட்ட அறிக்கை:-

சோயா பீன்ஸில் இருந்து உருவாக்கப்படும் இயற்கை மருந்தானது புற்று நோய்களுக்கு தீர்வாக அமைகிறது.
அதிலும், மார்புப் புற்றுநோய், குடல், சிறுநீர்ப்பை, ஈரல், நுரையீரல், லிம்போமா மற்றும் வாய் புற்றுநோய் போன்றனவற்றிற்கு நிவாரணமளிக்கிறது” என்று மிசூரி பல்கலைக் கழகத்தின் விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

Leave a Response