ராஜ்யசபாவில் பேச அனுமதி மறுத்ததால் எம்,பி, பதவியை ராஜினாமா செய்த மாயாவதி!

mayawati1

உத்தரப்பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவருமான மாயாவதி, இவரது கட்சியின் சார்பில் ஒரே ராஜ்யசபா உறுப்பினராக இவர் இருந்து வந்தார்.

சில தினங்களுக்கு முன் ராஜ்யசபாவில் தலித்துகள் மற்றும் சிறுபான்மையினத்தவர்களுக்கு எதிரான கொடுமைகளை பேச அனுமதி வேண்டும் என்று கோரினார். ஆனால், ராஜ்யசபா துணைத் தலைவர் பிஜே குரியன் மறுத்தார். முழு உரையாற்ற அனுமதியில்லை. பேச அனுமதி மறுக்கப்பட்டால்,
நான் எம்.பி., பதவியை ராஜினாமா செய்வேன் என்று மாயாவதி தெரிவித்து இருந்தார். இதையடுத்து பேசிய, பாஜக எம்.பி., முக்தர் அப்பாஸ் நக்வி, ”மாயாவதி அவையை அவமதித்து விட்டார். அதனால் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

கோபமடைந்த மாயாவதி அவரது எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதத்தை, மாநிலங்களவைத் தலைவர் ஹமீது அன்சாரி ஏற்றுக்கொண்டார்.

Leave a Response