ஸ்டெர்லைட் ஆலை விவகாரம்:7 அம்ச கோரிக்கைகளை முன்வைத்த மக்கள்..!

ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான 7 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி தூத்துக்குடியில் இன்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையால் புற்றுநோய் ஏற்படுவதாக மக்கள் புகார் கூறுகின்றனர். மேலும் நிலத்தடி பாதிக்கப்படுவதுடன் விவசாயமும் செழிக்கவில்லை.

இதனால் ஸ்டெர்லைட் ஆலையை மூடுமாறு தூத்துக்குடியில் குமரெட்டியாபுரம் மக்கள் கடந்த 83 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கம் சார்பில் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி வி.வி.டி. சிக்னல் அருகே இன்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும், ஸ்டெர்லைட் ஆலையால் புற்றுநோய் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு 20 லட்சம் ருபாய் நிவாரண நிதி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்தில் தூத்துக்குடி நகர்பகுதி மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கத்தினர், பொதுமக்கள், நடிகர் மன்சூர் அலிகான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Response