நீட் தேர்வு விவகாரம் : தமிழக அரசை விமர்சித்த நடிகை கஸ்தூரி..

மருத்துவத்திற்கான நீட் நுழைவுத்தேர்வு நாளை நடைபெறுகிறது. தமிழகத்தை சேர்ந்த பல மாணவர்களுக்கு கேரளமா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இதற்கு தமிழகத்தில் கடும் கண்டனம் எழுந்துள்ளன. தமிழக மாணவர்களுக்கு விஷால், பிரசன்னா, அருள்நிதி உள்ளிட்ட பலரும் உதவ முன் வந்துள்ளனர். இந்நிலையில், நடிகை கஸ்தூரியும், பாலக்காடு, எர்ணாகுளத்தில் நீட் தேர்வு எழுத செல்லும் பிள்ளைகளுக்கு தங்கும் இடம், உணவு வசதி செய்து தருகிறேன் என்று சொல்லி ஒரு தொடர்பு எண்ணை கொடுத்துள்ளார்.

பாலக்காடு , எர்ணாகுளம் சென்டர்களில் நீட் தேர்வு எழுத வேண்டிய பிள்ளைகளுக்கு தங்கும் இடம் , உணவு ஏற்பாடு செய்து தருகிறேன். உங்கள் ஹால் டிக்கெட், பயணவிபரம் whatsapp இல் அனுப்பவும் . தொடர்புக்கு- Kasthuri , jai 9789895953.

நீட் தேர்வு எழுதச்செல்லும் மாணவ, மாணவிகளுக்கு உதவி செய்யும் விதமாக தமிழக அரசு ரூ.1000 வழங்கப்படும் என அறிவித்திருக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள கஸ்தூரி, “ஓட்டுக்கு ஐந்தாயிரம், நீட்டுக்கு ஆயிரமா?” என்று தனது டுவிட்டரில் கோவமாக பதிவிட்டுள்ளார்.

வோட்டுக்கு 5000 . நீட்டுக்கு 1000 . #தமிழகம் #தூத்தேறி

Leave a Response